பழனி முருகனின் சிறப்பு          

         பழனி அருள்மிகு தண்டாயுதபாணி  திருக்கோவிலை

 அறியாதவர்கள் இருக்க முடியாது.
         மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியே அமைத்துள்ளது பழனி.இன்றைய திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்த பகுதி கொங்கு நாட்டின் வளமான இடங்களில் ஓன்று என தமிழ்நாட்டின் வாழ்க்கை வரலாறு பக்கங்கள் தெரிவிக்கின்றன.

        முருகனின் அறுபடை வீடுகளில் பழனி மூன்றாவது படைவீடு. ஞானப்பழத்திற்குப் போட்டியிட்டதில் விநாயகர் பெருமான் வெற்றிபெற்று பழத்தை பெற்றதால் ஏற்பட்ட சினத்தோடு முருகன் வந்து நின்ற இடம்தான் பழனி முருகனின் சினம் தணிக்க அவரை   சிவபெருமானும், பார்வதியும், ஓளவையும் வந்து பேசி ‘பழமே நீதான்’… உனக்குப்பழம் வேண்டுமா?…. என்று கூறியதால், ‘பலம் நீ’ என்பது பழனி என்று ஆனது.

பழனி  நவபாஷாண சிலை

      நவபாஷாண சிலையில் ஒன்பது பிரதான பாஷாணங்கள் சேர்க்கப்பட்டு அதனுடன் பல மூலிகை சாறுகள் பிழிந்து கலக்கப்பட்டு, பலவிதமான எரிபொருளை வைத்து அவை தயாரிக்கப்பட்டது என்று சித்த நூல்கள் சொல்கின்றன.




      வீரம்,  பூரம், ரஸம், ஜாதிலிங்கம், கந்தகம், கௌரிபாஷணம், வெள்ளை பாஷாணம், மிருதார்சிங், சிலாஜித் ஆகியவைதான் அந்த ஒன்பது பொருள்கள்.இவைபோல பல வஸ்துக்களையும் மூலிகைகளையும்  கலந்து திரவ நிலை குழம்பை கெட்டிப்படுத்தி திடப்பொருளாக மாற்றும்வித்தை போகருக்கு தெரிந்திருந்தது.

       போகரின் தலைமையில் , 81 சித்தர்கள் ஒன்று சேர்ந்து 81 வகையான வஸ்துக்களை கலந்து 9 கலவைகளாகிய பிறகே இந்த பாஷணக்கட்டு செய்யப்பட்டது. இந்த கலவைகளை 9 விதமான எரிபொருள் கொண்டு காய்ச்சி 81 முறை வடிகட்டி சித்தி செய்ய பட்டதாக  அவரது பாடல்களில் சொல்ல பட்டுள்ளது.

      எரிபொருளைக் இரண்டு வகையாக பிரித்தார் , அது தாவரம் சார்த்த சுள்ளி விறகுகள் மற்றும் பிராணிகளின் எச்சக் கழிவுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *