போகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் ?_ ( bogar siddhar )

             சீறலுடன் பொய்சூது  கபடுதந்திரம் 


                   சிறப்பான குறைபாடு வதிமார்க்கம் 


           மீறவே தானடக்குங் கலியுகத்தில் 


                   மிக்கான வுண்மையது வறிந்து கொள்ளே ‘ ( 6967 )
          கலியுகத்தில் வாழும்  மக்கள் கடும் கோவம் பெற்று, பொய் பேசி,சூது  வாதும் செய்து ,தந்திரமாக பொருள்களை அபகரித்து ,வாழும்  வாழ்க்ககையை குறையுள்ளதாக்கி  அவதிப்பட்டு இருப்பார்கள்.புலிப்பாணி பாலகா! கலியுகத்தில் யாரையும் நம்ப வேண்டாம் .அநியாயங்கள் மிகுந்து தலைவிரித்து ஆடும். உத்தமானே  அதற்கு நீ மயங்கிவிடாதே என்று சீடனை எச்சரிப்பதுபோன்று  உபதேசம் செய்கிறார் போகர்.

     கலியுகத்தில் மரியாதை இல்லாத மாண்பர்கள் எல்லோரும் கண்ணவிந்து போனவர்கள். அவர்களுக்கு ஏற்றமாக நல்ல தத்துவங்கள் சொன்னாலும் எதுவும் எடுபடாது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top