சித்த மருத்துவம் வரலாறு _ siddha maruthuvam

Siddha Maruthuvam History Tamil

              சித்தர்கள்  உடம்பு அழிந்து போகாமல் காப்பாற்றும் வழி அறிந்தவர்கள்.தாங்கள் கண்டறிந்த சித்த மருத்துவம் உண்மை களை, சுவடிகளில் பாடல்களாய் செய்து பத்திரப்படுத்தினர்.அவர்களுடைய சீடர்கள் வழியே ஞானம், சித்த மருத்துவம்  உலகெங்கும் பரவலாயிற்று.

            சித்த மருதித்துவம் பார்வதி,பரமசிவம் மூலமாக நந்திக்கு சொல்லப்பட்டு அவர் மூலம் திருமூலர்க்குக் கிடைத்தது  என்கிறது புராணம்.மனிதன் அழியா நிலையை அடைவதற்கான வைத்திய முறையை திருமூலர் சொல்லி வைத்தார்.

          உடலின் அணுக்கள் அழியும் நிலை வரும்போது பிணி,மூப்பு,இறப்பு ஏற்படும்.இதனைத் தடுப்பதற்கு உடம்பை தூய்மையாக வைத்து இருக்க வேண்டும் என்று திருமூலர் வலியுறுத்தினார்.
        அணுக்களின் அரே மாதிரியான இயக்கம் காரணமாக அவை நாளடைவில் பழுதடையும்.அணுக்களின் மாற்றத்தை தடுக்க முடிந்தால் ? இந்த கேள்வி எழுந்தது சித்தர் மனதில்.மூலிகை சிலவற்றை பயன்படுத்தி  அணுக்களை மாறாமல் தடுக்கலாம் என்று அவர்களுக்குத் தோன்றியது.

         முதலாம் முறையில் தவத்தின் சாக்தியோடு வெடி உப்பு,படிகாரம் போன்றவற்ரையும்,நவ பாஷாணங்களையும்,சேர்த்துக் கையாளுவார்கள் .

        இரண்டாம் முறையில் மூலிகைகளைப் பயன்படுத்து வார்கள்.
மூலிகைச் சேர்க்கையில் இரும்பை திருப் பிடிக்காமலும்,செம்பை பாசி பிடிக்காமலும் தடுக்க முடியும்.அதே மாதிரி மூலிகையால் உடம்பில் உள்ள அணுக்களின் அழிவைத் தடுக்க உடம்பில் பிணி,மூப்பு,சாக்காடு இல்லாமல் காக்க முடியும்.

      மனித குரும வினைகளுக்கு ஏற்ப உடம்பின் நாடிகளில் ஏற்படும் மாற்றம் நோய்களை உண்டாக்கும்.வினை வழிப்பட்டதை அனுபவித்தே தீரவேண்டும்.நோயில்லாத மனிதரில்லை.எனினும் இயற்கை தந்த மூலிகைகளை கொண்டு நோய்களை கட்டுப்படுத்த முடியும் என்றது சித்த மருத்துவம்.

   

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top