அட்டமா சித்திகள்
1. அணிமா
2. மகிமா
3. இலகிமா
4. கரிமா
5. பிராத்தி
6. பிரகாமியம்
7. ஈசத்துவம்
8. வசித்துவம
அணிமா :-
அணுவைக் காட்டிலும் மிக சிறிய உருவிலே உலவும் ஆற்றலுக்கு அணிமா என்று அழைக்கப்படுகிறது.
மகிமா. :-
மலையை விட பெரிய உருவம் எடுதழ் உலவும் ஆற்றல் மகிமா என்று அழைக்கப்படுகிறது
இலகிமா :-
உடம்பை கனமாக இல்லாமல் மிகவும் லேசாக மாற்றிக் கொள்வது காற்றைப் போல் விரைந்து செல்லுதல் இலகிமா என அழைக்கப்படுகிறது
கரிமா. :-
ஐம்புலன்கள் நுகரும் இன்ப துன்பங்களை பற்றி கவலைப்படாமல் அவற்றுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருப்பது.
பிராத்தி :-
தான் எதை விரும்பினாலும் எதை நினைத்தாலும் அடையும் ஆற்றல்.
பிரகாமியம் :-
தன் நினைப்பின் வன்மையால் எல்லாவற்றையும் படைக்கும் ஆற்றல்.
ஈசத்துவம் :-
காண்பவர்கள் அனைவரும் தன்னை வணங்கும்படி தோற்றம் பொலிவை பெற்றிருக்கும் திறன்.
வசித்துவம் :-
உலகம் முழுவதையும் தன்வயப்படுத்தி நடத்தும் ஆற்றலை பெற்றிருப்பது ஆகும.