இயமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் பிரத்தியாகாரம் தாரணை தியானம் சமாதி
இயமம்
அகிம்சை எனும் இன்னா செய்யாமை புலால் உண்ணாமை கள்ளுண்ணாமை சத்தியம் களவின்மை பிரம்மச்சரியம் சன்மார்க்கம் தயை பொறுமை துணிவுடைமை மிதமான உணவு சுத்தம் இவைகளை சாதகன் கடைபிடித்து இதில் பயிற்சி அடைய வேண்டும்
நியமம்
தவம் உள்ளதைக் கொண்டு மனநிறைவு கொள்ளல் தெய்வ நம்பிக்கை தானம் தேவ பூஜை நிலையான புத்தி
ஆசனம்
ஆசனம் என்பது இருப்பு நிலை அதாவது நாம் நீண்ட நேரம் சுகமாக அமர்ந்திருக்கும் நிலை ஆசனங்கள் 120 வகையானது
பிரணாயாமம்
இது பிராணனை வசப்படுத்துதல் என்று அழைக்கப்படுகிறது இது ஒரு வகையான மூச்சுப்பயிற்சி மனம் நிற்க வாயு நீக்கும் வாயும் நிற்க மணமும் நிற்கும்
பிரத்தியாகாரம்
புலன்களை பொருட்களின் மீது ஆசைப்படாமல் நிறுத்துதல் மனதினை அடக்கி அது புலன்களோடு தொடர்ந்து செல்வதை நிறுத்துதலை பிரத்தியாகாரம்
தாரணை
ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரே குறியில் மனதை நிறுத்துதல்
தியானம்
ஒரு பாத்திரத்தில் இருந்து இன்னொரு பாத்திரத்திற்கு ஊற்றப்படும் இடையறாத எண்ணெயின் ஒழுங்கைப் போன்று இடையின்றி இறைவனை சிந்தித்திருப்பது தியானம் எனப்படும்
சமாதி
தான் ஆதிக்கு சமமான நிலைக்கு உயர்ந்து நிற்றல்