மூளையின் நான்குவித அலைகள்

             மூளையில் இருந்து நான்கு விதமான அலைகள் வெளியேறுகின்றன என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து நிரூபித்திருக்கிறார்கள் அந்த நான்கு வித முக்கியமான அலைகள் ஆல்பா பீட்டா தீட்டா டெல்டா என்று அழைக்கின்றனர்.

மூளை பீட்டா நிலையில் செயல்படும் போது

              நாம் வேகமாக எதையும் செய்யும் போதும் செயல்படும்போதும் கோபப்படும் போதும் நாம் பீட்டா அலைவரிசையில் செயல்படுகின்றோம்
இதன் வேகம் 13 சைக்கிள் என்ற வேகத்தில் வெளியேறுகிறது.

மூளையில் டெல்டா அலைகள் வெளியிடும்போது

            இந்த மின் அலைகள் மிகவும் மெதுவாக செயல்படக்கூடியது. இதன் வேகம் நாலு சைக்கிளுக்கு குறைவாக இருக்கும் இந்த நிலையில் ஒருவர் இருக்கும்போது அவர் மனம் ஆனது மிகவும் ஆற்றல் உடையதாகவும் எதையும் கிரகிக்கும் திறன் உடைய நிலையிலும் இருக்கும்.

        இந்த நிலையில் உள்ளவர்கள் ஐந்து புலன்களையும் வென்றவர்களாக இருப்பார்கள்.

       இந்த நிலையில் எட்டுவிதமான சித்திகளையும் நாம் விரும்பினால் அடைய முடியும்.

மூளையானது Theta அலைகளை வெளிப்படுத்தும் போது

     ஆல்பா அலை விட குறைந்த குறைவான சைக்கிள் உள்ள அலை theta waves என்று அழைக்கப்படுகிறது.

    நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நாம் உணர்வுகள் இல்லாது இருக்கும் நிலையில் மூளையானது இந்த அலைகளை வெளியேற்றுகிறது.

இது 4 முதல் 7 சைக்கிள் என்ற கணக்கில் வெளியேறுகிறது

மூளை வெளியிடும் alpha அலைகள்

      மனம் அமைதியாக இருக்கும் போது ஆல்பா நிலை தோன்றுகிறது
தூங்கும் போது அமைதியாக தெரிந்தாலும் இந்த நிலை ஏற்படுவதில்லை.
 
    ஆனால் தியானத்தின் போது ஏற்படும் இந்த அலைவரிசையில் துடிப்பு 8 முதல் 13 சைக்கிள் வரை இருக்கும்.




     இந்த அலைவரிசை பெரிதாகவும் வேகம் மெதுவாகவும் இருக்கும் இந்த நிலையில் மனதில் நிலையானது ஒரு  பரவச உணர்வினை பெறுகிறது உள்  மனம் திறந்து நமக்கு புரியாததை புரிய வைக்கிறது.

    ஆல்பா நிலையில் இருதயமானது மிகவும் மெதுவாக துடிக்கிறது இதனால் நரம்புகள் ஓய்வு நிலையில் இருக்கிறது.
  இந்த ஆல்பா லெவலில் இருந்து தியானம் பழகி விட்டால் அவர்களுக்கு  எதிர்காலத்தைறியும் ஞானம் கிடைக்கும்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *